Samstag, 11. Oktober 2014

பித்தம்

நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

பல் வலி

ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.

அறிகுறிகள்:
  • பல் ஆட்டம்.
  • ஈறுகளின் தேய்மானம்.
  • பல்கூச்சம்.
  • வாய்நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. ஆலமரப்பட்டை.
  2. சர்க்கரை.
செய்முறை:
ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.

இருமல்

வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.